வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் சக்திமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி முருகன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புஷ்பா சந்திப்பு பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திமுருகன் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் செல்போனை பறித்து சென்றது திருப்பூர் பெரிய தோட்டப் பகுதியில் வசிக்கும் அப்பாஸ், சர்புதீன், ஆசிக் அகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த 3 பேரும் தெற்கு போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 செல்போன்கள் பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 3 செல்போனையும் பறிமுதல் செய்தனர்.