Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. மனு அளித்த மாணவி…. ஆட்சியரின் உத்தரவு….!!

மாணவி அளித்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் தங்கள் பள்ளிக்கு ஆசிரியர் வேண்டி மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து கலெக்டர் அந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி அவர்களிடம் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் மற்றும் தேவையான கழிப்பிட வசதி, சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |