மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு அவரது உறவினரான ராமகிருஷ்ணன், ஆனந்த், பரமன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அங்கு ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கொக்கிரகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ராஜூ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ராஜூவை உடனடியாக மீது கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜூ பரிதாபமாக உயிரிழந்தா. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.