சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இவர் போல்டன் புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.