Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் மரத்தின் மீது காருடன் மோதியவருக்கு ரூ.9,500 அபராதம்…!!

நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த மரத்தை காரல் இடித்து சாய்த்த நபருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹரிதா ஹரம் என்ற சுற்றுச்சூழல் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மரத்தின் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார்.

காரால் இடித்து சாய்க்கப்பட்ட மரம், ஹைதராபாத் மரத்தை சாய்த்த நபருக்கு அபராதம்,

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள சிதிபெட் பகுதி வழியாக நேற்று மகிந்திரா ஸைலோ எஸ்யூவி ரக காரில் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த மரத்தை மோதி சாய்த்துள்ளார். இதுகுறித்து ஹரிதா ஹரம் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு ரூ. 9 ஆயிரத்து 500 அபராதம் விதித்தோம்” எனத் தெரிவித்தனர்.2015-16 ஆண்டில் ஹரிதா ஹரம் இயக்கம் சார்பில் நாடு முழுவதிலும் 175 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Categories

Tech |