நடுரோட்டில் கிடந்த துப்பாக்கியை மூதாட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டர்பாளையம் பகுதியில் கோபாலன்- விஜய லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது பேத்தியான விஜயா என்பவருக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை பார்ப்பதற்கு விஜயலட்சுமி அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோவை ரோட்டில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு மூதாட்டி சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது காந்தி சிலை அருகில் இருக்கும் தியேட்டர் முன் கிடந்த கருப்பு நிற கோட்டை மூதாட்டி எடுத்து பார்த்துள்ளார். அதில் ஒரு துப்பாக்கியும், கையுறையும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி உடனடியாக அதனை காவல்நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துப்பாக்கியை போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.