நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் மாதாந்திர கட்டணங்களை குறைத்துள்ளது. அதன்படி, இதற்கு முன் இருந்த 199 ரூபாய் மொபைல் பிளான் கட்டணம் 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 499 ரூபாய்க்கு பேசிக் பிளான் 199 ரூபாயாகவும், மாதம் 649 ரூபாயாக இருந்த ஸ்டாண்டர்ட் 499 ரூபாயாகவும், 799 ரூபாயாக இருந்த பிரிமியம் பிளான் 649 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அமேசான் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கட்டணக் குறைப்பால் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்துபவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.