செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி தமிழக தென்னை விவசாயிகள், பனை விவசாயிகள் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கை…. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, எல்லாம் ஆங்கில சாராயத்தை விற்று அரசாங்கமே கொடுக்கிறது. தனியார் மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யக்கூடியதை அரசே விற்று கொடுக்கிறது. கள்ளு கடையை திறந்தால் 4 விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள். கள் வந்து உணவின் ஒரு அங்கமாக, அரசியல் சாசனத்திலேயே வகுக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்த கள்ளு கடை திறக்க வேண்டும் அல்லது பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் இந்த கோரிக்கை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு கள் இயக்கம் தொடர்ந்து பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த முறை வருகின்ற ஜனவரி 21-ஆம் தேதி தடையை மீறி அரசியல் சாசனம் நமக்கு வகுத்து கொடுத்திருக்கிற உரிமையின்படி கள் இறக்கும் போராட்டம் அறிவித்து இருக்கிறது.
அதில் முழுமையாக நாங்கள் பங்கெடுப்போம். நாங்களே அந்த கள் கட்டும் போராட்டத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு அந்த இயக்கத்தை வெற்றியடையச் செய்வோம். அதேபோல மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், கடந்த முறை அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த கோரிக்கை கொள்கை அளவிலே ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தாலும் அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இப்போ சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம் இப்படி எல்லாம் சொல்கிறார் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்… அவருடைய இந்த ஆட்சியிலே இந்த கள்ளு கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் விவசாயிகள் தங்களுடைய மரங்களிலே கள்ளு கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம் என தெரிவித்தார்.