Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயசு… 22வயசு இருக்கு… சின்ன சின்ன பசங்க கொடுக்காங்க… புலம்பும் அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  காவல்துறை டிஜிபி கண்ட்ரோலில் கிடையாது. டிஜிபி அவர் சைக்கிளில் போவதற்கும், ஒரு புகைப்படம் எடுப்பதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே போய் போட்டோ எடுப்பதற்கு மட்டும் தான் தமிழகத்தில் டிஜிபி. தமிழ்நாட்டில் காவல்துறையை செயல்படுத்துவது திமுகவினுடைய மாவட்ட செயலாளர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஐடி விங்க் நிர்வாகிகள் தான் தமிழ்நாட்டில் காவல்துறையை அந்தந்த மாவட்டத்திலேயே எஸ்பிஐ கண்ட்ரோலில் வைத்து நடத்துகிறார்கள்.

ஒரு நேர்மையான டிஜிபியாக இருந்தால் இவ்வளவு பேரு கருத்து போட்டு இருக்கின்றார்கள், இவ்வளவு பேர் பதிவு போட்டு இருக்கின்றார்கள். எல்லார் மேலேயும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கு இந்த பாரபட்சமான நடவடிக்கை ?  அவருடைய கண்ணுக்கு தெரியவில்லையா ?  தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஸ்காட்லாந்து போலீசுக்கு சமம் என்று சொல்கிறோம்.

விபத்து நடந்த உடனே, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது அதை பாராட்டக்கூடிய அந்நிய சக்திகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதை பாராட்டி போடுகிறார்கள் என்றால் தமிழ்நாடு டிஜிபி கண்ணுக்கு தெரியவில்லையா ?  டிஜிபி சம்பவ இடத்திற்கு போய் மிட்டால் பெயர் வராது. அலுவலகத்தில் உட்கார்ந்து பேனா, பேப்பரில் போலீஸ் வேலை செய்தால் டிஜிபி நல்லவர் என்று ஒத்துக் கொள்கிறோம்.

சும்மா சம்பவ இடத்திற்கு போய் போட்டோ எடுத்துவிட்டால் டிஜிபி கடமையைச் செய்தார் என்று தமிழக பாஜக கருதாது. டிஜிபி அவர்கள் ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்  போட்டு, தமிழ்நாட்டில் யாரெல்லாம் இது போன்ற கருத்துக்களை பேசி இருக்கின்றார்கள் ? எத்தனை குரூப் ?  யாரெல்லாம் ? கம்யூனிஸ்ட் சார்ந்த குரூப்புகள், திராவிட கழகத்தை சார்ந்த குரூப்புகள் ஆக்சன் எடுக்கட்டும்.

அதனால்தான் நான் திரும்ப சொல்கிறேன். ஆன் ரெக்கார்டு சொல்கிறேன், டிஜிபி யை பொருத்தவரை தமிழக காவல்துறை அவரது கையிலிருந்து நழுவி விட்டது. தமிழக காவல்துறை இருப்பது அந்தந்த மாவட்டத்தில் ஆளும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் கையில்…  அங்கே இருக்க கூடிய ஐடி விங்  சின்ன பசங்க கையில்… 21 வயசு, 22 வயசு. எல்லா வழக்குகளையும் திமுக ஐடி விங் பசங்க போட்டு உள்ளார்கள். அங்கே இருக்கக்கூடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்,  இன்ஸ்பெக்டர் போட்ட கேசா..

மாரிதாஸ் மேலே கொடுத்துள்ள கேஸ் யார் கொடுத்த கேஸ் ? அங்கு இருக்கக்கூடிய திமுகவின் ஐடி விங்க் செயல்பாட்டாளர் கொடுத்த கேஸ். அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய திமுக ஐடி விங்  சின்ன பசங்க போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள். அதேபோல் கன்னியாகுமரியில் யாரோ ஒருவர்  கைது செய்யப்படுகின்றார் என தெரிவித்தார்.

Categories

Tech |