ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 19 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாலும் முதலமைச்சர் எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியோடு பக்தர்களும், கோவில் பணியாளர்கள் மகிழ்ச்சி அடையும் சொர்க்க வாசல் திறப்புக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளார். ஏற்கனவே உள்ள நோய்த்தொற்று மற்றும் புதிதாக பரவும் நோய்த் தொற்று ஆகியவற்றினை பொருத்து மற்ற கோயில் விழாக்களிலும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.