Categories
தேசிய செய்திகள்

600 சட்டவிரோத லோன் செயலிகள்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 600 ஆன்லைன் கடன் ஆப்புகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் ஆப்களின் அட்ராசிட்டி  ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.  சட்டவிரோத கடன் ஆப்களால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத ஆப்கள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல்வேறு ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1100 ஆன்லைன் ஆப்கள் செயல்பட்டு வருவதாகவும், அதில் 80க்கு மேற்பட்ட ஆப்கள் ஸ்டோர்களில் கிடைப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள்  Loan, instant loan, quick loan போன்ற வார்த்தைகளை கொண்டு தேட முடிகிறது எனவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது.  ஆன்லைன் ஆப்கள் குறித்து புகார்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் புகார்களை பெறவும், நடவடிக்கை எடுக்கவும் தனி இணையதளத்தையே ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. 2020 ஜனவரி முதல் 2021 மார்ச் மாதம் வரை ஆன்லைன் கடன் ஆப்கள் குறித்து 2562 புகார்கள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.  இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 572 புகார்கள் பதிவாகியுள்ளன. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 394 புகார்களும், டெல்லியில் 352 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |