Categories
தேசிய செய்திகள்

நாளை, நாளை மறுநாள்…. வங்கிகள் இயங்காது…? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிசம்பர் 16(நாளை) மற்றும் 17(நாளை மறுநாள்)  ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |