இங்கிலாந்தில் 31 வார கர்ப்ப காலத்திலிருந்த 33 வயதாகும் பெண்ணொருவர் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு கோமாவிற்கு சென்ற நிலையில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் லாரா என்னும் 33 வயதாகும் பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய 31 வார கர்ப்ப காலத்தில் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த லாராவிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக லாரா பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். ஆகையினால் லாராவிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நல்லபடியாக மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்கள்.
இருப்பினும் லாரா கடந்த 7 வாரங்களாக மயக்க நிலையை விட்டு திரும்பாமலேயே இருந்துள்ளார். அதன் பின்பு கடந்த 7 வாரங்களாக மயக்க நிலையிலிருந்த லாரா ஒரு நாள் கோமாவிலிருந்து கண் முழித்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு பிறந்த பெண் குழந்தையை மிகுந்த ஆரவாரத்துடன் முத்தமிட்டுள்ளார்.