தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் நாளை முதல் 18-ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும். குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும். இதனால் மீனவர்கள் 18ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.