தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் துணை மின் கோட்டத்திற்குட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சூர், விண்ணமங்கலம் , நாவல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (டிச. 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, அரணாரை, கே. கே. நகா், அபிராமபுரம், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுமுகை , ஜடையம்பாளையம் , தேரம் பாளையம், செனம்பாளையம் , ஆலாங்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வருகிற 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட மின் பாதைகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட உடுமலை மின் நகர் , சின்னப்பன் புதூர் , ராஜாவூர், ஆவல்குட்டை , சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி , வெங்கடாபுரம், துங்காவி, மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதூர், ஆகிய இடங்களில் வினியோகம் இருக்காது
தேனி துணை மின் நிலையத்தில் டிச. 15 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, இன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேனி-அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.