பாம்பு கடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலகில் அதிக விஷமுள்ளவைகளில் புலி பாம்பும் ஒன்றாகும். இந்த பாம்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை கடித்துள்ளது. இதனையடுத்து அவன் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் அவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பாம்பு கடியிலிருந்து மீண்டு வருகிறான்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அதிகமாக இவ்வகை பாம்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் புவியியல் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. அதில் ” உலகின் மூன்றாவது அதிக விஷமுள்ள பாம்புகளில் இதுவும் ஓன்று. இவை அதிகளவு விஷத்தை கக்கும் தன்மையுடையது. இது நீர்வாழ் சூழல்கள் மற்றும் பல வீடுகளிலும் கூட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பாம்பு கடித்து உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் பக்கவாதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சில நேரங்களில் இறப்பு கூட நேரிடலாம். குறிப்பாக சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.