Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொந்தரவு தாங்க முடியல…. மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பெண் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பெண் ஒருவர் தனது மகனுடன் வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் தொகரபரப்பள்ளி பகுதியில்  வசிக்கும் அலமேலு மற்றும் அவரது மகன் நித்திஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அலமேலுவின் சகோதரர் வீட்டை காலி செய்யுமாறு அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து மத்தூர் காவல்துறையினர் சமரசம் பேசியும் அவர் தொடர்ந்து தொந்தரவு அளித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த அலமேலு தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |