Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண்…. ஊழியர்கள் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா லே-அவுட் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் டீ மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகின்றார். இங்கு 2 பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வழுதரெட்டி காலனி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனசேகரின் கடைக்கு சென்றுள்ளார். இந்த பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் ரஸ்க் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதன்பிறகு பணத்தை தராமல் அங்கிருந்து செல்ல முயன்ற பெண்ணை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது என்னிடம் பணம் கேட்டால் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறி அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடையில் இருந்த பெண் ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தனசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ஊழியர்களை அந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |