Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீனுக்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

மீனுக்காக விரித்திருந்த வலையில் மலைப்பாம்பு சிக்கிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் பழனியில் இருக்கும் பெரியகுளம் தற்போது பெய்த மழையினால் நிரம்பியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வாலிபர்களும், பெரியவர்களும் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி குளத்தின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

இங்கு ஒருவர் மீன்பிடி வலையை விரித்து கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மீனுக்கு விரித்திருந்த வலையை இழுத்து பார்த்தபோது அதில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories

Tech |