கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக ஆத்தூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழ தென்கலம் பகுதியில் இருக்கும் சாமுவேலுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மாரிமுத்து குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து கிணற்றுக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.