ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போதைக்கு தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தலைவரான Gerald Gass கூறியபோது “மக்கள் பொது இடங்களில் கூடுவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் வரவேற்கப்படுகிறது.
இதனையடுத்து ஜெர்மன் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தடுப்பூசி கட்டாயமாகும். ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தடுப்பூசி செலுத்தியோர் வீதம் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜெர்மனியில் 7 நாட்களில் 1,00,000 பேரில் எத்தனை பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்ற எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. The Robert Koch நிறுவனத்தின் அறிக்கையின்படி ஞாயிற்றுக்கிழமை 390.9 ஆக இருந்த அந்த எண், திங்கட்கிழமை நிலவரப்படி 389 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.