Categories
மாநில செய்திகள்

JUSTIN : அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்….  அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆசிரியர்கள் மாணவிகள் அத்துமீறுவது அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பது முன்பை விட அதிகரித்துள்ளது. கோவை பள்ளி மாணவிக்கு ஆசிரியர் அளித்த பாலியல் தொந்தரவு காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த சில தினங்களில் கரூரில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி தொடர்ச்சியாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருகின்றது. பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. முக்கியமாக பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |