மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள் நகர் நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் அஜித்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.