Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI 2-வது டி20 : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 37 ரன்கள் குவித்தார்.

இதன்பிறகு 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்னில் சுருண்டது. இதனால் 9 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |