கன்னியாகுமரியில் பெற்றோரின் கவன குறைவால் பூட்டிய வீட்டில் சிக்கிய 2 1/2 மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் நிதின்-சிந்து என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 1/2 மாத கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவனை வழியனுப்புவதற்காக சிந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீசிய காற்றினால் வீட்டின் முன்பக்க கதவு தானாகவே அடைத்து லாக் ஆனது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவின் பூட்டை உடைத்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.