Categories
சினிமா

“வலிமை படப்பிடிப்பின் போது வழுக்கி விழுந்த அஜித்”…. சொல்ல வருவது என்ன?…. இதோ முழு விளக்கம்….!!!!

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்தபோது நடிகர் அஜீத் வழுக்கி விழும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் மற்றும் கவச உடை பாதுகாப்பை தரும் என்பதை உணர்த்தவும், தனது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த காட்சியை அஜீத் வெளியிட செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வலிமை படம் தொடர்பாக அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அதன் மேக்கிங்கில் தாங்கள் கொரோனா மற்றும் தொழில் முடக்கத்தால் சந்தித்த சோதனைகளை காட்சிகளாக படக்குழு அப்டேட் செய்துள்ளது.

அதாவது பைக் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடம் வலிமை மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதில் படத்தின் சண்டை காட்சிக்காக நிஜமாகவே பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்தபோது அஜீத் சாலையில் வழுக்கி விழும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து வழுக்கி விழுந்த இடத்தில் எழுந்து நடக்கும் அஜீத் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகளுடன், அதன் பின்னணியில் மகாத்மா காந்தியின் பொன் மொழி இடம்பெற்றிருந்தது. பைக் ஓட்டும்போது வீலிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தலைக்கவசம் மற்றும் கவச உடை ஆகியவை அணிந்து இருந்ததால் பெரிய அளவிலான காயங்களிலிருந்து தப்பியது ரசிகர்களுக்கு அறிவுறுத்தவே இந்த காட்சியை அஜீத் மேக்கிங் வீடியோவில் இணைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |