Categories
மாநில செய்திகள்

JUSTIN: ரெய்டு நடக்கும் தங்கமணி வீட்டிற்கு…. எஸ்.பி வேலுமணி வருகை…!!!!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த‌தாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டிற்கு எஸ்.பி.வேலுமணி வருகை தந்துள்ளார்.

Categories

Tech |