அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன்கார்டு மற்றும் அடையாள அட்டைகளை அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆணையிட்டது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாத அதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும் அனைத்து குடிமக்களுக்கும் தொழிலை கடந்து அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அது அரசின் தலையாய கடமையாகும். அதனால் பாலியல் தொழிலாளர்களுக்கு, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்குவதற்கு மாநிலஅரசுகள் மத்திய அரசுக்கு ஆணையிட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, பாலியல் தொழிலாளர்களுக்கு 4 வாரத்திற்குள் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது.