Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அறைக்குள் சென்ற வாலிபர்…. கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் இன்ஜினீயரான விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலை அறைக்கு சென்ற பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |