நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ஆம் தேதி காட்டேரி பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இதையடுத்து வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் 80% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்தார்..
இந்நிலையில் வருண் சிங் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.. இந்த தகவலை இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளது.. இதனால் குன்னூர் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13ல் இருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.. 13 பேர் மரணமடைந்த நிலையில், தற்போது வருண் சிங்கும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021