தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 வருடங்களாக எந்தவித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவதால் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டது.
இதற்கிடையில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் குரூப்பு-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் தற்போது மின் வாரியத்தில் புதிய ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பு 2022 ஜனவரி மாதம் வெளியாகும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தில் பல்வேறு பணி இடங்களில் மொத்தம் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார். இவ்வாறு காலிப்பணியிடங்கள் நிரப்பபடாததால் பணியில் உள்ள ஊழியர்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் மனா உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புமாறு தொழிற்சங்கங்கள் மின்சார வாரியத்தினை வலியுறுத்தி வருகின்றனர். உதவி பொறியாளர் பணி இடங்கள்- 600, கணக்கீட்டாளர்- 1300, இளநிலை உதவியாளர்- 500 போன்ற பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2020-ஆம் வருடம் விருப்பங்கள் பெறப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடைபெறவில்லை. தற்போது விண்ணப்பம் செய்தவர்கள் விரைவில் தேர்வு நடத்துமாறு மின் வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆட்கள் தேவையின் அவசியம் கருதி தேர்வு செய்யப்பட இருக்கின்றனர் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.