அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சேர்ந்து தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், அங்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளில் சுமார் 9,562 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களில் குழந்தைகள் 0.27% தான் என்ற தகவல் ஆறுதல் அளிக்கிறது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களில் 4% தான் குழந்தைகள். எனவே, குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டாலும், அபாயகரமான விளைவுகள் உண்டாகவில்லை என்று தெரியவந்திருக்கிறது.