Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: “வேதனையளிக்கிறது” கேப்டன் வருண்சிங் மரணம்…. பிரதமர் இரங்கல்…!!!!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இந்தநிலையில் பிரதமர் மோடி,” கேப்டன் வருண்சிங் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க இயலாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |