Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : விராட் கோலி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிசிசிஐ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள  இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும்                 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார் .

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது .இதனால் விராட் கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |