Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற தொழிலாளி….11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணம்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நட்பாக பேசி வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் ஆசை வார்த்தைகள் கூறி ராஜமாணிக்கம் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |