Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS AUS ஆஷஸ் டெஸ்ட் :2-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு …..!!!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான  ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது . இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது  காயமடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹசில்வுட், டேவிட் வார்னர் இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி தங்களது  பிளேயிங் லெவனை  இன்று அறிவித்துள்ளது. இதில் காயமடைந்த  ஹசில்வுட்க்கு  பதிலாக  அணியில் ஜெய் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார் .இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த டேவிட் வார்னர் அணியில் இடம் பிடித்துள்ளார் .இதற்கு முன்பாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி  தொடரில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி: மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி , பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜெய் ரிச்சர்ட்சன்.

Categories

Tech |