தமிழகத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி வருகிறது. இதில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியானது 91 வருடங்களாக இயங்கி கொண்டு வருகிறது. அதாவது இந்த வங்கியானது 1930-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இயங்கி வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி சென்னையில் மட்டும் 71 கிளைகளை கொண்டு உள்ளது. இந்த வங்கி மூலமாக குறைந்த வட்டியில் நகை கடன்களை பெற முடியும். மேலும் இந்த வங்கி மூலமாக பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் பெற முடியும். அதிலும் குறிப்பாக மகளிர் சுய உதவி குழு கடன், மகளிர் வளர்ச்சி கடன், பணிபுரியும் மகளிர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு தொழில் மேம்பாட்டு கடன், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடல் போன்ற கடன்களை குறைந்த வட்டியில் பெறமுடியும்.
தற்போது இந்த வங்கியானது வங்கி சிறப்பு கடன் முகாம்களை அனைத்து பகுதிகளிலும் நடத்தி அதன் மூலம் அதிக கடன்களை மக்களுக்கு வழங்கவும் மற்றும் அரசுத் திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று ஆதம்பாக்கம் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடைபெற்றது. இதனையடுத்து வருகிற ஜனவரி 8-ஆம் தேதி பாண்டி பஜார் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் 72 வாடிக்கையாளர்களுக்கு 34.51 ரூபாய் லட்சம் வழங்க இருப்பதாக திட்டமிட்டுள்ளது.
மேலும் முகாம்கள் நடக்கும் இடங்களான டிசம்பர் 22-ஆம் தேதி ஆர்.வி.நகர் கிளை, டிசம்பர் 29-ஆம் தேதி அண்ணா நகர் 2-வது அவன்யூ, ஜனவரி-5 ஆம் தேதி சூளைமேடு, ஜனவரி 12-ஆம் தேதி எம்.எம்.டி.ஏ. காலனி, ஜனவரி 19-ஆம் தேதி ஜாம்பஜார் கிளை மற்றும் ஜனவரி 27-ஆம் தேதி அசோக்நகர், பிப்ரவரி 2-ஆம் தேதி கொளத்தூர் கிளை, மற்றும் பிப்ரவரி 9-ஆம் தேதி பிராட்வே போன்ற பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 75 50 09 40 90 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகாம் பற்றிய கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.