Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெற்றோர்களே…. உங்கள் குழந்தைக்கு ஆதார் எடுத்தாச்சா?…. இதோ பால் ஆதார் கார்டு…. உடனே இத பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த ஆதார் இல்லாமல் இந்தியாவில் தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலைமை வந்து விடும் போல உள்ளது. அந்த அளவிற்கு மிக முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. நம் அனைவரிடமும் ஆதார் கார்டு கட்டாயம் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிறைய பேர் ஆதார் எடுக்க மாட்டார்கள். சிலருக்கு அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டு என்ற பெயரில் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வசதி அங்கேயே இருக்கும். ஆனால் சில இடங்களில் குழந்தைக்கு 9 மாதங்களுக்கு மேல் ஆன பிறகுதான் ஆதார் எடுக்க முடியும் என்று கூறுவார்கள். ஆதார் கார்ட் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம். குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விபரங்கள் தேவைப்படும். குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையதள பக்கத்தில் சென்று அப்பாயின்மென்ட் பெற வேண்டும்.

நேரடியாக கூட அப்பாயின்மென்ட் வாங்கலாம். ஆன்லைனில் அப்பாயின்ட்மெண்ட் வாங்குவதற்கு https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையதள பக்கத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் மொபைல் நம்பர், ஈமெயில் ஐடி போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தற்போது ஆதார் எடுப்பதற்கான அப்பாயின்மென்ட் உங்களுக்கு கிடைத்துவிடும். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஆதார் மையத்திற்கு சென்று ஆதார்  எடுக்கலாம்.

ஆதார் எடுக்கும்போது பிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகை பதிவு எடுக்க முடியாது. எனவே ஐந்து வயது தாண்டிய பிறகுதான் கைரேகையை அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஆதார் செயலிழந்துவிடும். அதனைப்போலவே கருவிழி ஸ்கேன், முகத்தின் ஸ்கேன் ஆகியவையும் அவசியம். ஐந்து வயதில் அப்டேட் செய்த பிறகு மீண்டும் 15 வயதில் அப்டேட் செய்தால் போதும்.

Categories

Tech |