நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருவதனால், அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஆணையிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரில் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பல்வேறு உருமாற்றம் அடைந்து, சுகாதார துறையினரை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான ஒமைக்ரான் இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தநிலையில், நெதர்லாந்து நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே ஆணையிட்டுள்ளார். இது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது, கிறிஸ்மஸ் நேரத்தில் பொது மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி இதுவல்ல. குழந்தைகளையும் தொற்று அதிக அளவில் தாக்குவதால் பள்ளிகளுக்கு 2 வார விடுமுறை தற்போது 3 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை விட பலமடங்கு அதிகமாக பரவி வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் நெதர்லாந்தில் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி முதல் உணவகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள் போன்றவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை காலத்திலும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.