இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம் தான். அதனால் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்தது. இந்த தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக ஒரு நாம் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. இந்நிலையில் கொரோனா வைரசிலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவி வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுவரை அந்த மாநிலத்தில் 28 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் அதிக வீரியத்துடன் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் புதிய வகை வைரஸ் ஊடுருவி கொண்டிருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் அமலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.