ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். இந்த அட்டையின் உதவியுடன் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. இது ஒரு அடையாள அட்டை ஆகவும் உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை முறையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.
அது இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் நாம் பெற முடியும். அவ்வாறு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டில் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் அதனை ஆன்லைன் மூலமே செய்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் முகவரி மாற்றம் செய்வது பெரிய சிக்கலாக உள்ளது. அதனை மிக எளிதாக ஆன்லைன் மூலமாகவே எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் www.pdsportal.nic.in என்ற லிங்க்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் உள் நுழைய வேண்டும்.
இதில் முகப்புப் பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள ‘மாநில அரசு இணையதளங்கள்’ (‘State Government Portals’) என்பதை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்த பிறகு மாநிலங்களின் பட்டியல் திரையில் தோன்றும். அதில் எந்த மாநிலம் வேண்டுமோ அந்த மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த மாநிலத்துடன் தொடர்புடைய மற்றொரு பக்கத்திற்கு இப்போது நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் (‘ration card address change form’ or ‘change in ration card form’) தொடர்பான பொருத்தமான லிங்க்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள் நுழையவும்.
தேவையான விவரங்களை சரியாக நிரப்பி, பின்னர் ‘சமர்ப்பி’ (Submit) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
எதிர்கால தேவைக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
இந்த செயல்முறையைப் பின்பற்றும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு போர்ட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெவ்வேறு மாநிலங்களுக்கான ஸ்டெப்ஸ்கள் மாறுபடும் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.தமிழகத்தில் https://tnpds.gov.in/login.xhtml இந்த இணைய முகவரிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.