மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க மேற்கொண்ட முயற்சியானது தோல்வியை சந்தித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ரஷ்யாவும் இந்தியாவும் இந்த விவாதத்திற்கு எதிராக வாக்களித்ததால் மேற்கத்திய நாடுகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் 197 நாடுகள் ஏற்றுக்கொண்ட புவி வெப்பமயமாதலுக்கான ஐ.நா. திட்ட வரைவுக்குழு புவி வெப்பமயமாதல் பிரச்சனை குறித்து விவாதிக்க தனியே செயல்பட்டு வருகிறது.
எனவே 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கான இடம் கிடையாது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேசமயம் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் பின்னணியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது.