Categories
மாநில செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் ஜாக்பாட்…. அமைச்சர் சொன்ன சூப்பர்  தகவல்….!!!!

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழலில் பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.  இதனால் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவிகளும் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எங்கெல்லாம் கழிவறை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள் தேவை என்பது கேட்கப்பட்டு வருகின்றது. மேலும் ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வு தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது இது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜனவரி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது கூப்பிடத்தக்கது.

Categories

Tech |