Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர். வட்டி விகிதத்தை உயர்த்துவதாக எஸ்பிஐ அறிவித்து உள்ளது. அதாவது புதிய கட்டணங்கள் நேற்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தற்போது புதிய வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு 0.10 % செலுத்தப்படும். இதன் மூலமாக பிரைம் லெண்டிங் ரேட்டையும் அதிகரிக்க SBI வங்கி முடிவு செய்து இருப்பதோடு, 10 சதவீதத்தில் இருந்து 12.30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை விகிதம் 10 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த புதிய விகிதம் 7.55 சதவீதமாக இருக்கும். இதனிடையில் அடிப்படை விகிதத்தை அதிகரிப்பதன் விளைவு வட்டி விகிதங்களில் இருக்கும். அடிப்படை விகிதத்தை அதிகரிப்பதன் மூலமாக வட்டி விகிதங்கள் முன்பு இருந்ததை விட விலை உயர்ந்ததாக மாறும். இதனால்  கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளது. அடிப்படை விகிதத்தை தீர்மானிக்கும் உரிமை வங்கிகளின் கைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இதில் எந்தவொரு தனியார் அல்லது அரசு வங்கியும் அடிப்படை விகிதத்திற்குக் கீழ் கடன் வழங்க முடியாது.

அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் அடிப்படை விகிதத்தை தரமாக நினைக்கின்றது. இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டி ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து தவணைக் காலங்களுக்கான கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் இல் எந்த மாற்றமும் செய்யவில்லை என எஸ்பிஐ தெரிவித்து உள்ளது. இந்த கட்டணங்கள் முன்பு இருந்தது போலவே இருக்கும். வீட்டுக் கடன் துறையில் SBI அதிக பங்கு வகிக்கிறது. எஸ்பிஐ சந்தையில் மொத்தக் கட்டுப்பாட்டில் 34% உள்ளது. இதனிடையில் 5 லட்சம் கோடி வரை எஸ்பிஐ கடன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் 2024-க்குள் இந்த எண்ணிக்கையை 7 லட்சம் கோடியாக உயர்த்த எஸ்பிஐ இலக்கு வைத்து உள்ளது.

Categories

Tech |