Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளிர் திட்டத்தின் சார்பில்…. 106 கோடி மதிப்பீட்டில்…. சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி….

தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 50,463 சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட மற்றும் கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது மாவட்டத்தை சேர்ந்த 159 மகளிர் சுய உதவி குழுவினருக்கும் 17.20 கோடி ரூபாய் கடன் உதவியும், சமுதாய முதலீட்டு நிதியாக 25 சுய உதவி குழுக்களுக்கு 12.50 லட்சம் ரூபாயும், மகளிர் சுயஉதவி பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமுதாய பண்ணை பள்ளி தொடக்க நிதியாக 10 சுய உதவி குழுவினருக்கு 4.20 லட்சம் ரூபாயும், ஆடு வளர்ப்புக்காக 7 பேருக்கு 7 லட்சம் கடன் உதவி என மொத்தம் 105.95 கோடி ரூபாய் மதிப்பில் கடன் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து சட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கூடுதல் மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் விஜயலட்சுமி உட்பட பல்வேறு நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |