சாராயம் மற்றும் மது விலக்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையில் கலெக்டர் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் அருகில் மதுவிலக்கு மற்றும் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பின் இம்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்பட கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பஜார் வீதி உள்பட 4 சாலை வழியாக சென்றுள்ளனர். அந்நேரம் மதுவுக்கு அடிமை ஆகாதே, மதுவில் மயங்காதே மதியை இழக்காதே என அவர்கள் கோஷமிட்ட படி சென்றுள்ளனர். மேலும் இவற்றில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.