பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள், ரேஷன் பொருட்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பாலியல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.