தமிழக அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 3 கோடி மதிப்பில் நடமாடும் தேநீர் வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய நடமாடும் தேனீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் சென்னையில் 10, கோவையில் 4, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா மூன்று வாகனங்கள் என 20 தேனீர் வாகனங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் தரமான தேனீர் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.