நடிகர் யோகி பாபு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைசுவை நடிகராக மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் யோகி பாபு நடிக்கும் மலையோரம் வீசும் காற்று படத்தின் படப்பிடிப்பு போடி அருகே குரங்கணி குட்டக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பின் போது யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும், யோகி பாபு கார் டிரைவர் ராமச்சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதால் சதாம் உசேன் காயமடைந்தார். இதையடுத்து சதாம் உசேன் குரங்கணி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. படப்பிடிப்பில் நடந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.