Categories
தேசிய செய்திகள் பல்சுவை

போஸ்ட் ஆபீஸ் ஆக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்…. புதிய பாஸ்புக் பெற எளிய வழிமுறைகள் இதோ….!!!!

இந்தியாவில் அஞ்சல் துறைகள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீட்டு திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்கள் அதில் உள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு விதிமுறைகளையும், கால அளவுகளையும் கொண்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். மேலும் கிராமப்புற மக்கள் அதிகம் அஞ்சலக கணக்கு தொடங்குகின்றனர்.

ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் மிகப் பொருத்தமானவை ஆகும். அஞ்சலகத்தில் கணக்கு தொடங்குபவர்களுக்கு வங்கிகளை போலவே வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்படும். இந்தநிலையில், ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலையில் உங்களுடைய அஞ்சலக கணக்கு புத்தகம் தொலைந்து போக நேர்ந்தால், எளிதான முறையில் புதிய பாஸ்புக் பெற்றுக்கொள்ளலாம்.

https://drive.google.com/file/d/1AGcka52vun51Wazt16-2|1YeKXgCu6F/view என்றலின் மூலம் புதிய பாஸ்புக் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் 50 ரூபாய் ஆகும். மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உங்கள் KYC ஆவணங்களையும் கொடுக்க வேண்டும்.உங்கள் விண்ணப்பத்தை PRI அதிகாரிகள் சரிபார்த்த பின்னர், ஓரிரு தினங்களில் புதிய கணக்கு புத்தகம் உங்களுக்கு வழங்கப்படும்.அஞ்சலகத்தில் இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இருவரும் விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவது அவசியம். ஒருவர் மட்டும் கையொப்பமிட்டால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Categories

Tech |